நடராசா சச்சிதானந்தன். London SE6 4YG: அம்பனை கலைப்பெருமன்றம் (UK), 49, Ravensbourne Park Crescent, Catford, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: 50 ஸ்டேர்லிங் பென்ஸ், அளவு: 24×18 சமீ.
இந்நூலாசிரியர் சச்சிதானந்தன் இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 44 ஆண்டுகளாக லண்டனில் லூசியம் பகுதியில் வசித்து வருகின்றார். உரும்பிராய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் நீண்ட பொதுப்பணிக்குச் சொந்தக்காரர். 1993இல் சில நண்பர்களுடன் சேர்ந்து இலண்டன் சிவன் கோவிலை ஆரம்பித்து அதன் முதற் செயலாளராக ஆறு ஆண்டுகள் செயற்பட்டவர். 1998இல் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தை ஆரம்பித்து அதன் முதலாவது செயலாளராகவும் பணியாற்றி முதற் சைவ மாநாட்டை லண்டனில் நடத்தியவர்.