17141 ஈலிங் அருள்மிகு ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம்: மகா கும்பாபிஷேக சிறப்புமலர்: 6.6.2011.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் W13 9AE: ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், 5, சப்பல் வீதி, ஈலிங் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2011. (இலண்டன் HA0 3HS: ஆர்.எஸ். அச்சகம், 34, Court Parade, East Lane, Wembley).

156 பக்கம், புகைப்படங்கள், வண்ணப்படம், விலை: இலவசம், அளவு: 28×19.5 சமீ.

மேற்படி ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தை நினைவுகூருமுகமாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் 10-08-1991 அன்று  Harrow Honey Bond மண்டபத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் சபையின் ஸ்தாபிதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 25-10-1991இல் இந்த வழிபாட்டிடம் Southall Shakelton மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 11-08-1992 இல் இவ் வழிபாட்டிடம் Wembley Union மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 29-01-1993 அன்று எழுந்தருளி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. 14-04-1993 முதல் சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் அறங்காவலர் சபையின் சிபாரிசில் முதலாவது ஆலய நிர்வாக சபை பதவியேற்று ஆலய வளர்ச்சிக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. 09-06-1995 அன்று ஈலிங் பகுதியில் ஆலயத்திற்கான நிரந்தரமான கட்டிடம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. 1998 ம் வருடம் வைகாசி விசாகத்தில் மூலவர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கான அத்திவாரங்கள் இடப்பெற்று கட்டிட வேலைகள் ஆரம்பமாயின. 29-05-1999 அன்று ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கான கணபதிஹோம வழிபாடு நடைபெற்றது. 06-06-1999 அன்று முதலாவது மகாகும்பாபிஷேகம் (குடமுழுக்கு விழா ) வெகு சிறப்புடன் நிறைவுபெற்றது. 20-07-2001 அன்று முதலாவது மகோற்சவப் பெருவிழா ஆரம்பமாகி அம்பிகை 25 நாட்கள் வெள்வேறு திருக்கோலங்களுடன் அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருள்பாலித்தார்கள். 6.6.2011இல் இடம்பெற்ற மகா கும்பாபிஷேக நிகழ்வுக்கு பல்வேறு சமய நிறுவனங்களும், சமயப் பெரியார்களும் வழங்கிய ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன், சைவ சமயம் சார்ந்த சிறு கட்டுரைகளையும் உள்ளடக்கி இச்சிறப்பு மலர் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

App nach iOS & Androide laden

Content 25 euro casino bonus – Welches sie sind unser Bedingungen für jedes Freispiele im Eye of Horus Slot? Eye of Horus Häufig gestellte fragen

12909 – விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழா மலர்: 20.07.1991.

மலர்க்குழு. கனடா: வே.கணேஸ்வரன், தலைவர், தமிழ் முருகன் கோவில் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9). 68 பக்கம், புகைப்படங்கள்,