17143 புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்: மகா கும்பாபிஷேகப் பெருவிழா 25.06.2023.

சித்திரவேலு மயூரன் (மலராசிரியர்). புங்குடுதீவு: ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜ{ன் 2023. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி).

viii, 510 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

இப்பெருந்தொகுப்பு, பிரதானமாக மூன்று விடயங்களை உள்ளடக்குகின்றது. 1. புங்குடுதீவைப் பற்றிய ஆக்கங்கள் (புங்குடுதீவைப் பற்றிய ஆக்கங்களும் வரலாறுகளும் காலத்துக்குக் காலம் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிவந்துள்ள நிலையில் இந்நூலில் முக்கியமான விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தனித்தனிச் சுருக்கக் குறிப்புகளாக ஆசிரியர் ஆவணப்படுத்தியுள்ளார்). 2. புங்குடுதீவு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தைப் பற்றிய ஆக்கங்கள் (படங்களுடன் கூடிய மேற்படி ஆலயத்தின் தோற்றம் தொடர்பான வரலாறு, 90 வண்ணப் படங்களுடன் கூடிய 2023 ஆம் ஆண்டு புனருத்தாரண விபரங்கள், புனருத்தாரணத்துக்கு பங்களிப்பு செய்த அம்பிகை அடியார்களின் விபரங்கள், ஆலயத்திலேயே தற்போது முன்னெடுக்கப்படும் பயனுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ள பயனுள்ள செயற்றிட்டங்கள் பற்றிய விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன). 3. இந்து சமயத்தைப் பற்றிய ஆக்கங்கள் (கடல்போலப் பெருகியுள்ள ஆக்கங்களிலிருந்து நம் வாழ்வில் அன்றாடம் பின்னிப் பிணைந்த முக்கியமான கூறுகளை தனித்தனிச் சுருக்கக் குறிப்புகளாகத் தொகுத்து வழங்கியுள்ளார். அவ்வகையில் 125 தலைப்புகளின் கீழ் தனித்தனிச் சுருக்கக் குறிப்புகளாக இடம்பெற்றுள்ளன). இந்நூலில் முக்கிய அவதானத்தைப் பெறுவது, நீண்ட கட்டுரைகளுக்குப் பதிலாக சுருக்கமான கட்டுரைப் பதிவுகளாகும்.

ஏனைய பதிவுகள்

No-deposit Incentives 2025

Posts Bitcoin Local casino Playing – Why should you Accept they? Get the Better Gambling enterprise Freeze Video game playing ( BonusBlitz Incentives Is Crypto

‎‎local casino Globe Harbors and you can Benefits To your Software Store/h1>

16813 வீட்டு எண் 38/465.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு,