சு.சிவபாதசுந்தரம். கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஆவணி 1931. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
30 பக்கம், விலை: 10 சதம், அளவு: 20×14 சமீ.
இந்நூல் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி தலைமை ஆசிரியர் ஸ்ரீமத்.சு.சிவபாதசுந்தரம் அவர்கள் கொழும்பு விவேகானந்த சபையிலே செய்த உபந்நியாசத்தைத் தழுவி எழுதப்பட்டது. அப்பர் சுவாமிகள் தேவார நயத்தை ஆராயப் புகுவோர்க்குத் துணையாகுமென்றெண்ணி ஸ்ரீமத் சே.வெ.சம்புலிங்கம் பிள்ளையவர்கள் எழுதிய திருச்சரிதச் சுருக்கத்தையும் இந்நூலில் இணைத்துள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53564).