செல்லையா சிவபாதம். பண்டத்தரிப்பு: செல்லையா சிவபாதம், பணிப்புலம், 1வது பதிப்பு, ஆவணி 2017. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு).
52 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் கந்தசஷ்டி விரத காலத்தில் ஆலயங்களில் படித்துப் பயன் சொல்லும் கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப்படலத்தின் ஞானநெறி உரை விளக்கம் திருப்பெருவடிவம் அடங்கியது. கந்தனது பெரும்புகழ் பேசும் நூல் கந்தபுராணமாகும். அப்புராணம் சித்தாந்தப் பொருள் நிறைந்த சைவபுராணமாகும். கந்தசஷ்டித் தினங்களாகிய ஆறு நாட்களிலும், சுப்பிரமணியப் பெருமான் சூரபன்மனாகிய ஆணவமலத்தின் வேகத்தைத் தணித்து அந்த ஆன்மாவுக்கு அருள்பாலித்தார். அந்த அற்புதமான கதை கந்தபுராணத்திலே சூரபன்மன் வதைப்படலத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலாபூஷணம் செல்லையா சிவபாதம் ஒர சைவசித்தாந்த பண்டிதரும், பௌராணிக வித்தகருமாவார். இந்நூல் 2017ஆம் ஆண்டின் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின், பிரதேச கலாசார அபிவிருத்தி செயற்திட்டமான ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு நிதி’ உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது.