சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: திரு. சபாபதி மகேஸ்வரன், 1வது பதிப்பு, ஐப்பசி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
திருவாசகத்தின் நுனிப்பான கருத்துள்ள பாடல்களைத் தெரிவுசெய்து கையடக்க நூலாக தொகுப்பாசிரியர் வெளியிட்டுள்ளார். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கமும் இந்நூலின் தொடக்கத்தில் காணப்படுகின்றது. இவர் ஏற்கெனவே பஞ்சபுராணத் தொகுப்பு (மாசி 2002), பன்னிரு திருமுறைத் தொகுப்பு (தை 2006, தை 2010), திருமுருகன் பாமாலை தொகுப்பு (கார்த்திகை 2012), பஞ்சபுராணத் திரட்டு (பங்குனி 2015), அம்பிகை அருட்பாமாலை (ஆவணி 2017) ஆகிய நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.