ஆறுமுக நாவலர். சென்னை 600 017: முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, ஜுலை 1997. (சென்னை 600 013: பாரி ஆப்செட் பிரின்டர்ஸ், 7B, கொடிமரத் தெரு).
xii, 368 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12 சமீ.
நம்பியாண்டார் நம்பி சரித்திரம், பெரிய புராணஞ் செய்தருளிய சேக்கிழார் நாயனார் சரித்திரம், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகை, திருமாவடுதுறைச் சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவை, உண்மை நாயன்மாார் மகிமை, குருபூசை, திருத்தொண்டர் புராணம், சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் என்பனவற்றுடன், பிரதான பகுதியான முதலாவது இயலில் தில்லைவாழந்தணர் சருக்கம், இரண்டாவது இயலில் இலை மலிந்த சருக்கம், மூன்றாவது இயலில் மும்மையாலுலகாண்ட சருக்கம், நான்காவது இயலில் திருநின்ற சருக்கம், ஐந்தாவது இயலில் வம்பறாவரி வண்டுச் சருக்கம், ஆறாவது இயலில் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், ஏழாவது இயலில் பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், எட்டாவது இயலில் கறைக்கண்டன் சருக்கம், ஒன்பதாவது இயலில் கடல்சூழ்ந்த சருக்கம், பத்தாவது இயலில் பத்தராய்ப் பணிவார் சருக்கம், பதினொராவது இயலில் மன்னிய சீர்ச் சருக்கம் ஆகியனவும் இவ்வசன நூலில் இடம்பெற்றுள்ளன.