மீ.ராஜகோபாலன். ஐக்கிய இராச்சியம்: மீனாலயா பப்ளிகேஷன்ஸ், 28, கிங்ஸ்பீல்ட் அவென்யூ, நோர்த் ஹரோ HA2 6AT, 1வது பதிப்பு, ஜுன் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).
95 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
‘ஆதி’ எனத் தொடங்கி ‘ஆதி’ என்று முடிகின்ற வகையிலே 60 அந்தாதிகளும், நூல் பணிவாக மூன்று பாடல்களும், நூல் பயனாக ஆறு பாடல்களுமாக 69 செய்யுள்கள் இதில் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலும் அதனைத் தொடர்ந்து உரை விளக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஆங்கில மொழியில் அப்பாடல்களின் வரிவடிவமும், ஆங்கிலத்தில் அதன் பொருளும் மேலதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மொழி மூலமும், தமிழ் தெரியாதோருக்காக ஆங்கில மொழிமூலமும், இவ்வந்தாதிச் செய்யுள்களையும் அவற்றின் பொருள் விளக்கத்தையும் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
மேலும் பார்க்க:
பண்ணுக்கு ஒரு பாடல். 17405
பேரின்ப விடுதலை பாடல்கள். 17572