17189 LLRC அறிக்கை மற்றும் சிவில் சமூகம்.

துஷால் விதானகே. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 17 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள டுடுசுஊ அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வெளியிடப்பட்ட கல்விசார் கருவியாக சிவில் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் இலங்கையின் மிக முக்கியமான பொதுத்துறை சார்ந்த பிரமுகர்கள் சிலர் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்து தாம் நேரில் கண்டறிந்த யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையும் தனிப்பட்டவர்களும், நிறுவனங்களும் சமர்ப்பித்த தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இலங்கை சமாதானப் பேரவையினால் 388 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கமான முறையில் தெளிவூட்டும் சாராம்சத்தை சிறு ஏடாக வெளியிடும் பணியை தேசிய சமாதானப் பேரவை பொறுப்பேற்றிருந்தது. மொத்தமாக ஆறு தொடர் புத்தகங்களைக் கொண்டதாக ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட இவ்விளக்க நூலின் தமிழாக்கம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

17120 தென்னிந்தியாவில் தேரவாத பௌத்தத்தின் பரவல்.

ஹிந்தகல ஞானாதார தேரர் (சிங்கள மூலம்), இரா.சடகோபன், மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு 3: பௌத்தாலோக்க நற்பணி மன்றம் (Bauddhaloka Foundation), இல. 491, 3 காலி வீதி, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, 2022. (அச்சக