ஜோசப் வேதமாணிக்கம் வில்லியம் (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, பலப்பொக்குண விகாரை மாவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 564 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15சமீ.
பக்குவமுள்ள ஒரு சமாதானச் செயற்பாட்டாளரும் புலமையாளருமான ஜோ.வில்லியம் அவர்கள் மிகவும் சிரமமான, அதே வேளை இறுதியில் தோல்வியடைந்ததுமான 2002-2008 சமாதான செயன்முறைகளைப் பற்றி ஒரு ஆழமான பகுப்பாய்வை முன்னெடுத்துள்ளார். விடாமுயற்சியுடனும் திறந்த கற்றல் மனநிலையோடும் தம் வாசகர்களுக்கு, ஆரம்பத்தில் மிகவும் உறுதியானதாகக் காணப்பட்ட சமாதான செயன்முறையில் என்ன பிழை நடந்தது என்பதையும் அதையும் தாண்டி, முடிவுபெறாமல் இருக்கும் முரண்பாட்டிற்கான அமைதியான இணக்கப்பாட்டிற்கு எப்படியான உறுதியான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் முன்வைக்கிறார். இந்நூல், அறிமுகம், முரண்பாட்டிற்கான தீர்மானமும் ஒழுங்குமுறைமைசார் முரண்பாடு பற்றிய கருத்தியல் திட்டமும், முரண்பாட்டிற்கான சந்தர்ப்ப சூழ்நிலையும் முரண்பாட்டின் பாத்திரங்களும், 2002 முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமாதானச் செய்முறை பற்றிய பகுப்பாய்வு, தேசிய சமாதானப் பேரவையும் போர் நிறுத்த ஒப்பந்தம் 1995-2001 தொடர்பாக ஏற்பட்ட வழிகாட்டலும், தேசிய சமாதானப் பேரவை ஆய்வு -2: முரண்பாடு மற்றும் சமாதானத்தின் இயக்கப் பண்புகளை விளங்கிக் கொள்ள ஒழுங்கு முறையான சிந்தனையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இலங்கைக்கான சமாதானச் செய்முறையை ஆதரிப்பதற்கான வழிமுறைகள், முடிவுரை ஆகிய இயல்களில் எழுதப்பட்டுள்ளது.