17198 ஈழத்தில் சாதியம் தொடர்பான புனைவு அல்லாத சில நூல்கள்.

 என்.செல்வராஜா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலைஅகம், அல்வாய், 1வது பதிப்பு, 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-50-4.

ஈழத்தின் இலக்கியப் படைப்பாளிகளுக்கான களமாகச் செயற்பட்டுவரும் ஜீவநதி, இலக்கிய சமூக வரலாறுகளை ஆவணப்படுத்துவதையும் தனது பணியாகக் கொண்டு இயங்கிவருகின்றது. 2023ஆம் ஆண்டில் வழமையான மாதாந்த இதழ்களுக்கு மேலதிகமாக 12 இலக்கிய ஆளுமைகள் தொடர்பான சிற்றிதழ்கள், 12 ஆவணச் சிறப்பிதழ்கள், என 36 இதழ்கள் வெளியாகின. இந்த இதழ்களில் ஜீவநதியின் 200ஆவது இதழாக அமைந்த வைகாசி 2023இற்குரிய ஆவணச் சிறப்பிதழ் 240 பக்கங்களில் விரிவாக ஈழத்துச் சாதியம் தொடர்பானதாக அமைந்திருந்தது. இந்தச் சிறப்பிதழில் ‘ஆக்க இலக்கியங்களுக்கும் அப்பால் சாதியம் பற்றிப் பேசும் சில நூல்கள்’ என்ற தலைப்பில் என்.செல்வராஜாவினால் எழுதப்பட்ட விரிவான கட்டுரையின் நூல்வடிவம் இது.

ஏனைய பதிவுகள்