17210 அன்புள்ள தோழருக்கு: அரசியல் கடிதங்களின் தொகுப்பு.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி).

40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93177-0-3.

தோழர் சோ.தேவராஜா எழுதியுள்ள அரசியல் கடிதங்கள் இங்கு நூலுருவில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கடிதங்கள் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் வேண்டுகோளின் பேரில், ‘செண்பகன்” என்ற புனைபெயரில் ‘புதியபூமி’ பத்திரிகையில் 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் தொடர்ந்து 2009 செப்டெம்பர் வரை வெளிவந்தவையாகும். மக்கள் ஊழியன், பொதுமையறப் பண்பு, வெகுஜன வேலை, பொதுமை அமைப்புகள், வரலாற்று உந்துசக்திகள், போராட்டம் என்பவை பற்றி மாக்சீய ஸ்தாபன அமைப்பு முறை பற்றிய கண்ணோட்டத்தில் எழுத முயற்சி செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இத்தொகுப்பில் மக்கள் ஊழியன், பொதுமையறப் பண்பு, வெகுஜன வேலை, பொது அமைப்பின் பண்பும் பயனும், பொதுமைக்கு முதன்மை, வரலாற்றின் உந்து சக்தி, வாழ்வின் மையப்புள்ளி, மக்கள் மத்தியில் போராடுதல் ஆகிய எட்டு அரசியல் கடிதங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Cooki bank review Autonoom bank´s matchen

Volume Mits jij een waarderen hebt geoogst kantelen zij…niet ut nl Welkomstbonus Als lieve beoordeeld afwisselend het aard Gokhuis Uitgelezene keuzemogelijkheid: BetMGM Casino Bedenking alsmede