17220 கிழக்கில் சிவந்த சுவடுகள்.

இரா.துரைரத்தினம். சுவிட்சர்லாந்து: இராமசாமி துரைரத்தினம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xix, 263 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-930780-3.

1956ஆம் ஆண்டு முதல் அண்மைக் காலம் வரை கிழக்கில் நடந்த தமிழ் சிங்கள முஸ்லிம் பொதுமக்களின் படுகொலைகளை பதிவுசெய்யும் ஒரு நூல். ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம் மிக்க நூலாசிரியர். 1981இல் ஈழநாடு செய்தியாளராக அறிமுகமான இவர், பின்னாளில் முரசொலி பத்திரிகையிலும், தொடர்ந்து மட்டக்களப்பிலிற்குச் சென்று வாழ்ந்த காலத்தில் லேக் ஹவுஸ் பிராந்திய செய்தியாளராகவும், விடிவானம்,தினக்கதிர் ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். தற்போது சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் இவர் அவ்வப்போது ஊடகங்களில் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கிழக்கில் நடத்தப்பட்ட முதலாவது கூட்டுப் படுகொலை, வீரமுனை படுகொலை, மீனோடைக்கட்டு தமிழ் கிராமம் பறிபோன கதை, உடும்பன்குளம் வயல்வெளியில் நடந்த கொடூரம், திருக்கோணமலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள், திருக்கோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை, பெரியபுல்லுமலை படுகொலை, கந்தளாய் மூதூர் படுகொலை, மூதூர் குமாரபுரம் படுகொலை, குமாரபுரம் படுகொலை விசாரணைகளும் ஏமாற்றங்களும், மூதூரில் அரசசார்பற்ற நிறுவன பணியாளர்களின் படுகொலை, மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் முஸ்லிம் கிராம படுகொலை, கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 பேர், சத்துருக்கொண்டானில் 185 பொதுமக்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட அவலம், அரந்தலாவயில் இளம் பிக்குகள் மீது புலிகள் நடத்திய தாக்குதல், கல்முனை படுகொலை, பாண்டிருப்பு கிராமத்தில் நடந்த இனஅழிப்புகள், புதுக்குடியிருப்பில் இரவு வேளையில் நடத்தப்பட்ட படுகொலை, சிங்கள ஜூரிகளால் நீதி மறுக்கப்பட்ட மயிலந்தனை படுகொலை, கொக்கட்டிச்சோலை அரிசி ஆலை படுகொலை, இலங்கையில் நியமிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி ஆணைக்குழு, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல், பழுகாமத்தில் மாணவர்களை படுகொலை செய்த இராணுவம், அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் எனப் பிரசாரம் செய்த அரச ஊடகங்கள், சித்தாண்டி முருகன் ஆலய அகதி முகாம் படுகொலை, புதுப்பால வீதியோரங்களில் உயிருடன் எரிக்கப்பட்ட பொதுமக்கள், புத்திஜீவிகளைத் தேடி அழித்த  தமிழ் ஆயுதக் குழுக்கள், தமிழ் இயக்கங்களால் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்கள், குழந்தைகளையும் விட்டுவைக்காத ஆயுதக் குழுக்கள், போர்ச்சூழலில் கொல்லப்பட்ட இலக்கிய ஆளுமை ஆனந்தன், புலிகளின் பிளவும் பொதுமக்களை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுகளும், தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த கிங்ஸ்லி இராசநாயகம், கல்விமான்கள்ஈ புத்திஜீவிகளை படுகொலை செய்த தமிழ் ஆயுதக் குழுக்கள், பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை கடத்தி கொலைசெய்த ரி.எம்.வி.பி. ஆயுதக்குழு, மனிதாபிமான பணியாளர்களையும் விட்டுவைக்காத பிள்ளையான் குழு, கொலையாளிகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் The tragic fate of TRO employees abducted by Karuna cadres-D.B.S.Jeyaraj, மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டு வெடிப்பு ஆகிய 40 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free online Casino games

Blogs Casino Crystal $100 free spins – Free Harbors Against A real income Slots Cleopatra Ports Totally free Harbors Vs Harbors For real Currency Because