17234 இரு இனத் தேசியங்களில் விடுதலைத் தேசியம்: இரு நினைவுப் பேருரைகளின் தொகுப்பு.

ந.இரவீந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

88 பக்கம், விலை: ரூபா 500.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-60-7.

ந.இரவீந்திரனின் இரண்டு நினைவுப் பேருரைகளின் தொகுப்பு. ‘அமரர்களான பேராசிரியர் க.கைலாசபதி, வ.செல்வராஜா ஆகிய இருவரினதும் சிந்தனைத் தளமும் செயற்பாட்டுக் களமும் எப்படி அமைந்திருந்தது என்பதை விவரிக்கும் அதே வேளை, அவர்களை முன்னிறுத்தி ஈழ அநுபவத்தில் தமிழ்த் தேசியத்தின் வீறார்ந்த எழுச்சியையும் கருத்துநிலைத் தளத்திலும் செயற்பாட்டு நடைமுறையிலும் அது சந்தித்த சவால்களையும் விவாதிப்பதுடன் நிகழ்ந்தேறிய தவறுகளுக்கான காரணங்களையும் அதற்கான எதிர்நிலை உபாயமாக விடுதலைத் தேசியமே அமைந்திருக்க வேண்டும் என்பதையும் தான் உறுதியாக நம்புகின்ற சித்தாந்தக் கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்துகின்றார்’ (இ.இராஜேஸ்கண்ணன்). முதலாவது உரையாக ‘விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமையில் பேராசிரியர் கைலாசபதி’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. இது மேலாதிக்கத் தேசியத்தை எதிர்த்தல், சமூக விடுதலையை உள்ளடக்கும் தேசிய விடுதலை, தேசிய இலக்கியமும் மக்கள் இலக்கியக் கோட்பாடும், பொதுத் தன்மைகளும் சிறப்புக் குணாம்சங்களும் ஆகிய நான்கு பிரிவுகளாக வகுத்து விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உரை ‘வ.செல்வராஜா – சமூக இலக்கியச் செயற்பாடுகளும் கருத்து நிலை அரசியலும்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டது. இது கல்விப் புலம், சமூகத் தளம், கலை இலக்கியக் களம், கருத்தியல் வீச்சு, அரசியல் பண்பாடு ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 433ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க:

இலங்கையில் பௌத்தம்: 17119

ஏனைய பதிவுகள்

15 Best Mobile Relationship

Posts Down load The fresh Love Bar Of the past Uncommon Gardening: Tricks and tips Whenever Playing The video game Almost every other Game Organizations

Jogos de Bingo Online Joga Dado

Content Examine este site | Veja a contenda dos melhores sites uma vez que jogos infantilidade bingo online abicar Brasil Avaliação acimade vídeo esfogíteado aparelhamento

15871 செய்கைமுறைப் படவேலை (க.பொ.த. சாதாரண வகுப்புக்குரியது).

க.குணராசா, ஆ.இராஜகோபால், க.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1967. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). 84 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா