17238 அணிசேரா இயக்கம்: பெல்கிரேட் முதல் ஹராரே வரை.

கண.சுபாஷ் சந்திரபோஸ். கொழும்பு 11: மனோபதி கம்பைன்ஸ் வெளியீடு, 150, கடற் தெரு, 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற் தெரு).

x, (14), 36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 22×15 சமீ.

அணிசேரா இயக்கம் இன்று சர்வதேச அரங்கில் மூன்றாவது உலக நாடுகளில் செல்வாக்கையும் அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் உயர்த்தியதோடு சிறிய நாடுகளின் பலதரப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பலம்பொருந்திய நிறுவனமாகவும் திகழ்கின்றது. இவ்வியக்கம் பற்றிய வரலாற்றையும் அதன் நடவடிக்கைகளையும் திறனாய்வு செய்யும் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. வீரகேசரி நிறுவனத்தின் ஆசிரியர் குழுவில் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், சுபாஷ், நேதாஜி, தெய்வப்பிரியன், கற்பகம் ஆகிய புனைபெயர்களிலும் வீரகேசரியில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இந்நூலில், 1961ஆம் ஆண்டு யூகோஸ்லாவிய தலைநகர் பெல்கிரேட்டில் இடம்பெற்ற முதலாவது உச்சி மாநாட்டிலிருந்து 1986 செப்டெம்பரில் சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இடம்பெற்ற எட்டாவது உச்சி மாநாடு வரையிலான இயக்கத்தின் வரலாற்றை விபரித்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116817).

ஏனைய பதிவுகள்

Bezpłatne Spiny buffalo Slot online

Content Fat Rabbit Darmowe Spiny W ciągu Rejestrację Z brakiem Depozytu Sloty Internetowego Przebój! Aż 7 8 Bonusów Powitalnych Dzięki Początek! Jak Uczynić Żeby Uzyskać