17245 முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம்: ஓர் இஸ்லாமிய நோக்கு.

றவூப் ஸெய்ன். காத்தான்குடி: ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம், 1வது பதிப்பு,  டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 130 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் விவாக, விவாகரத்து சீர்திருத்தப் பரிந்துரைகள் பற்றிய சட்டப் பார்வைகள் இவை. இந்நூல் நீண்ட காலமாக இலங்கையில் நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் வரலாறு, பிரதான உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்த முயற்சிகள் பற்றிய சுருக்க அறிமுகத்தைத் தருவதோடு எந்தெந்தப் பகுதிகளில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரப்படுகின்றதோ அப்பகுதிகளில் ஷரீஆ கண்ணோட்டங்களையும் சட்டவியலாளர்களின் பிக்ஹ{ கண்ணோட்டங்களையும் செலுத்துவதே இந்நூலின் பிரதான நோக்கமாயுள்ளது. அந்த வகையில் பிக்ஹ{, ஷரீஆ, கானூன் வேறுபாடுகளையும் மத்ஹப் பற்றிய விவாதத்தையும் முன்னிறுத்தும் இந்நூல், திருமண வயது, பலதார மணம், பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல், வலீ, திருமணத்தைப் பதிவு செய்தல் போன்ற பல்வேறு விவகாரங்களை பரந்துபட்ட இஸ்லாமியப் பிக்ஹு கண்ணோட்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் அலசுகின்றது.

ஏனைய பதிவுகள்

777 Ports

Posts Sign up for Save your Favourite Slots! See An online Slot Online game 100 percent free Slot Games Faq Because the i merely list