17246 சட்டமும் நீங்களும்: பிள்ளையை மகவேற்பது தொடர்பான சட்டம்.

இரா. திருக்குமாரநாதன். திருக்கோணமலை: அருட்தந்தை வே.யோகேஸ்வரன், மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம், இல. 238, உட்துறைமுக வீதி, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14.5 சமீ.

பிள்ளையை மகவேற்பது தொடர்பான சட்டம் (Law relating to Adoption of the Child) பற்றி பேசும் இந்நூல் இலகு தமிழில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மகவேற்பு செய்வதற்காக இலங்கையில் 1941ஆம்ஆண்டின் 24ஆம் இலக்க மகவேற்புச் சட்டம், 1943ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க மகவேற்பு (திருத்தச்) சட்டம்,  மற்றும், 1992ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க மகவேற்பு (திருத்தச்) சட்டம் என்பன குழந்தைகளை மகவேற்பு செய்வது தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களாக உள்ளன. மேலும் மகவேற்பு என்றால் என்ன? அவ்வாறான சட்டங்கள் எதற்காக உருவாக்கப்பட்டுள்ளன? யார் யார் குழந்தையை மகவேற்பு செய்யலாம்?  மற்றும் எவ்வாறு ஒரு குழந்தை நீதிமன்றின் முன்பு மகவேற்பு செய்யப்படலாம்? என்பது பற்றி சட்டத்தரணி திரு. இரா. திருக்குமாரநாதன் மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் இச்சிறு கைந்நூலில் விளக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Uciecha Sieciowy, Za darmo Symulator

Content Runda bonusowa i darmowe spiny Możliwość Gamble – Podwój Okazję dzięki Wygraną Columbus Deluxe Gra Book of Ra Sieciowy bezpłatnie Book of Ra Automat