றவூப் ஸெய்ன். திஹாரிய: அபிவிருத்திக் கற்கைகள் மையம், Centre for Development Studies (CDS), 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).
200 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22×15 சமீ.
உளவியலில் மிக முக்கிய பேசுபொருளான மனநலம் (Mental Health) குறித்து கலாநிதி றவூப் ஸெய்ன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. உளநலத்தைப் பாதிக்கும் மனக்கோளாறுகளையும் அதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. மனநலம் ஓர் அறிமுகம், மகிழ்ச்சியும் மனநலமும், உளஆரோக்கியமும் உள மாறாட்டங்களும், மனோநிலை மாறாட்டங்கள், பதகளிப்புக் கோளாறுகள், மெய்ப்பாட்டு மாறாட்டம், உளச் சிதைவுக் கோளாறு, போதைப்பொருள் மாறாட்டங்கள், உணவு மாறாட்டங்கள், உறக்கக் கோளாறுகள், பாலியல் நடத்தை மாறாட்டங்கள், மனப்பிளவு நோய், ஆளுமைக் கோளாறு, மன மாறாட்டங்களுக்கான காரணங்கள், மன மாறாட்டங்களுக்கான சிகிச்சை, ஆகிய 15 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71443).