17252 குறைபாட்டுக் குழந்தைகள்/மனிதர்.

கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 6, இராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்).

10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

நுண்ணறிவு, தாய்-சேய் (கெற்பகால காரணிகள்/ பிரசவகால காரணிகள்), தவறான குழந்தை வளர்ப்பு (பிறந்தபின் வரும் காரணிகள்), என மூன்று பிரிவுகளாக வகுத்து குறைபாட்டுக் குறந்தைகள் பற்றிய விளக்கத்தினை ஆசிரியர் சுருக்கமாக வழங்கியிருக்கிறார். பிறந்தபின் வரும் காரணிகளாக அறிமுகம், குழந்தை மையக் குடும்பம், தாய் வயிற்றில், நீராட்டுதல், உணவு-சுத்தம்-சுகாதாரம், சில ஒழுங்கீனம், குழந்தையின் பிடிவாதமும் அழுகையும், குழந்தைக்கு எரிச்சல் உண்டாக்கும் செயல்கள், பயங்கர செயற்பாடுகள் சில, ஒலி-ஒளி தாக்கம், ஆடை அணிகள், கல்வியில் தேவையற்ற தலையீடு, மக்கட்பேறு-திருக்குறள், தவறான குழந்தை வளர்ப்பால் உண்டாகும் பின்விளைவுகள் சில ஆகிய 14 தலைப்புகளில் விளக்கமளித்திருக்கிறார். இந்நூலாசிரியர் இலங்கை கல்விச் சேவையில் தரம்-2 கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27656).

ஏனைய பதிவுகள்

13615 சொட்டுத் தண்ணீர்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.,

10273 மார்க்சியக் கண்ணோட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் கல்விப் பிரச்சினைகளும் தரமான கல்வியும்.

பி.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: பி.முத்துலிங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ், ஆஸ்பத்திரி வீதி). xii, 156 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ. பதினொரு அத்தியாயங்களில் இந்நூல்