இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு. கொழும்பு 7: இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 36, மலலசேகர மாவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(1-16), 17-47 பக்கங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5040-10-0.
மனித நாகரீகத்தினது மிகவும் சிறந்த நம்பிக்கைக்குரிய அன்பளிப்பு திருமணமாகும். அத்திருமணத்தின் மிகப்பெரிய, உன்னத அடையாளமாக விளங்குவது திருமண மோதிரமாகும். அம்மோதிரத்தைத் தாங்கிய எமது உன்னதமான கரம் தீயவற்றை தொடாது, தூய்மையானதாக இருக்கவேண்டும். அது போன்றதே அரச சேவை என்பதும் தூய்மையானதாகவும் உன்னதமானதாகவும் தொழில்சார் தகைமையோடு முன்னெடுக்கப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (CIABOC) நிதியுதவி அளிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறைமை மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்தல் செயற்றிட்ட நடவடிக்கைகளின் ஊடாக அமெரிக்க மக்களின் தாராள ஆதரவினால் இந்தப் பதிப்பானது சாத்தியமாகியுள்ளது.