17258 கைந்நூல் 3: முரண்பாட்டு ஆர்வ விதிகள்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு. கொழும்பு 7: இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 36, மலலசேகர மாவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(1-16), 17-51 பக்கங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:21×14.5 சமீ., ISBN:978-624-5040-09-4

தங்களது பணியினை மேற்கொள்ளும்போது அரசாங்க சேவையாளர்களிடம் உத்தியோகபூர்வ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உறவுகள், நெருங்கிய நண்பர்கள், எனப் பலரும் வருகை தருவர். சில நேரங்களில் அங்கு தனிப்பட்ட நட்பு அல்லது நிதிசார் உறவு அல்லது சமூக அக்கறை நிலவலாம். இன்றைய தினத்தில் அவ்வாறான பிணைப்பு இல்லாது விடினும் நாளைய தினத்தில் அத்தகைய புரிந்துகொள்ளல் உருவாவதனை அரசாங்க சேவையாளர் அறிந்து கொள்ளலாம். அனைத்து வெளி நபர்களிடமும் அரசாங்க சேவையாளருக்கு உறவுகாணப்படக் கூடும் என்ற நிலைமை அருகில் உள்ளவர்களிடத்தில் ஏற்படும். அது தொடர்பில் அரசாங்க சேவையாளர் நன்றாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. அவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச சேவையாளரின் பொறுப்பும் கடமையுமாவது, தமக்கிருக்கும் அந்த உறவு தொடர்பில் நிறுவனத்தின் முகாமைக்கு அறிவிப்பதாகும். ஆதலினால் அரச சேவையாளர் வெளிநபர்களுடன் சிறிதளவான தொடர்புடைமை காணப்படுமாயினும் அதனை வெளிப்படுத்த வேண்டும். உறவுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தாவிடின் அரச அலவல்களுக்கு சமமான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை என வெளியார் அர்த்தம் கற்பிப்பர்.  இம்முரண்பாட்டு ஆய்வு விதிகளின் நிர்வாகம் மற்றும் முகாமை தொடர்பிலான முறைமைகள் இக்கைந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிதியுதவி அளிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறைமை மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்தல் செயற்றிட்ட நடவடிக்கைகளின் ஊடாக அமெரிக்க மக்களின் தாராள ஆதரவினால் இந்தப் பதிப்பானது சாத்தியமாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்

15896 நெஞ்சம் மறப்பதில்லை: பிரம்மஸ்ரீ இரத்தின சபாபதிக் குருக்கள் குமாரசாமி சர்மா, ஸ்ரீமதி பார்வதி தம்பதிகளின் சதாபிஷேக சிறப்பு மலர்.

இ.குமாரசாமி சர்மா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் கும்பாபிஷேக தின வெளியீடு, பிரம்மஸ்ரீ இ.குமரசாமி சர்மா, ஓய்வுநிலை உதவி திட்டமிடல் பணிப்பாளர், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம்,

10 Segredos e Dicas para Abiscoitar nos Slots

Content Perguntas & Respostas infantilidade 777 Slot: Pokies de dinheiro real Girs grátis Bônus como jackpots abicar aparelho Histórias fascinantes, personagens incríveis como muitos prêmios