பி.ஏ.ஹூசைன்மியா (மூலம்), மா.கருணாநிதி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஞாபகார்த்த மன்றம், இல. 7, அலெக்சாந்திரா டெரஸ், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
09.04.2023 அன்று நிகழ்த்தப்பட்ட வித்தியாநிதி பேராசிரியர் சோ.சந்திரசேகரம் முதலாவது நினைவுப் பேருரை. பேராசிரியர் பி.ஏ.ஹூசைன்மியா, அமரர் சோ.சந்திரசேகரத்தின் நண்பர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர். இவர் புரூணை பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியராவார்.