நாளினி கணபதிப்பிள்ளை (மூலம்), இ.சு.முரளிதரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
180 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-63-8.
ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்ற அமரர் நாளினி கணபதிப்பிள்ளை அவர்கள் தனது கல்வியியல் முது தத்துவமாணிப் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைக்குச் சமர்ப்பித்திருந்த ஆய்வுக் கட்டுரையை அவரது மாணவரான இ.சு.முரளிதரன் நூலுருவில் பதிப்பித்து, தனது மதிப்புக்குரிய ஆசிரியையின் நினைவாக வெளியிட்டுள்ளார். இவ்வாய்வு பண்டுதொட்டு நவயுகம் வரை சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப அதற்கு முகம் கொடுக்கும் வகையில் ஆசிரியமும் பல்வகைப் பரிமாணங்களுடன் நிகழ்வதை வெளிப்படுத்த உதவுகின்றது. சமுதாயத்தில் ஆசிரியன், ஆய்வின் அடிப்படை, ஆசிரியரின் பண்புநிலை, ஆசிரியரின் கல்வித் தகுதி, கற்பித்தல் முறைகளும் உத்திகளும், கற்பித்தற் பேறுகள், முடிவுரை ஆகிய இயல்களில் எழுதப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 435ஆவது நூலாக வெளிவந்துள்ளது.