திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்குரிய பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவின் உரைப்பிரதி இதுவாகும். கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஸ்தாபகப் பீடாதிபதியாவார். சமகாலக் கல்வியில் ஆன்மீக ஒழுக்க நெறிகள் அவற்றின் பிரயோகம் மிக அவசியமானது. ஆசிரியர் கல்வியில் இந்த எண்ணக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக மேலதிக விளக்கம் தரும் வகையில் இந்நினைவுப் பேருரை அமைந்துள்ளது.