பொன்னையா விவேகானந்தன். சென்னை 600 117: மருதம் பதிப்பகம், 4A, பூபதி நகர், கீழ்க் கட்டளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை: தி பிரின்ட் பார்க்).
160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
பொன்னையா விவேகானந்தன் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், ரொறன்ரோ மாவட்டக் கல்விச் சபையின்பன்மொழிக் கல்வித் திட்ட அலுவலராகவும் செயற்படுகின்றார். தனது முனைவர் பட்டப் படிப்பிற்காக ‘பெயர்வுச் சமூகத்தின் தாய்மொழிக் கல்விச் சூழலை’ அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர் இப்பின்புலத்துடன் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ்ப் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் கல்விப் புலத்திற் பயன்படும் வகையில் தான் எழுதிய கட்டுரைகளை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் தாய்மொழிக் கல்வியும் பண்பாட்டு மொழியும், தமிழர் மரபுரிமை- புரிதலும் பேணலும், பெயர்வுத் தமிழரின் இருப்பின் கலைகள், தைப்பொங்கல்- ஒரு வரலாற்று நோக்கு, பண்பாட்டு நோக்கில் தைப்பொங்கல், காமன் விழா – காதற் பெருவிழா ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.