நவரட்ண சங்கீத்கண்ணா (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: ஸ்ரீசக்தி கிராப்பிக்ஸ்).
(80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.
இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், அமைதி அன்று ஆவேசம் இன்று, கேளடி சிவசக்தி, நாம் எங்கே போகின்றோம்?, குறள் வகுக்கும் அரசியல் முறை, தூயமனத்திலிருந்து உலகசமாதானத்திற்கு, புதிய பாடத்திட்டம் புதிய ஈழ வரலாறு, மாணவர் திறன் காண் போட்டிகள் – 1999, சில வினாக்களும் விடைகளும், ஆறாவது அறிவு, மனிதன் மாறிவிட்டான், ஸ்ரீ இராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் இந்துசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு, மானிட வாழ்வில் பகவத் கீதையின் மகத்துவம், இழப்பதற்று ஏதுமில்லை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டு மலரின் இதழாசிரியர் குழுவில் முதல் இதழாசிரியராக நவரட்ண சங்கீத்கண்ணாவும், துணை இதழாசிரியர்களாக சந்திரசேகரன் லோகதரன், சுதந்திரராஜா சுசீந்திரன் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20203).