17299 இருவரும் வேலைக்குச் செல்லும் பெற்றோரைக் கொண்ட மாணவர்களின் கல்வி.

விஷ்ணுவர்த்தினி பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

24 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-06-5.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய குடும்பச் சூழலில் அவர்களது பிள்ளைகளின் கல்விசார் பாதிப்புகள் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. அறிமுகம், மாணவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாணவர்களை கல்விச் செயற்பாட்டில் ஈடுபட வைக்க வேண்டியதன் முக்கியத்துவம், மாணவர்களின் கற்றலுக்கு பெற்றோரின் உள-உடலியல் ரீதியான ஒத்துழைப்பு, கற்றலுக்கான பொருளாதார வசதி, மாணவர்களின் கற்றல் நாட்டம் பற்றிய பெற்றோரின் மனப்பாங்கு, மாணவர்களின் கல்வி ஆர்வத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், நிறைவுரை ஆகிய உபதலைப்புகளில் இந்நூல்  எழுதப்பட்டுள்ளது. பரணீதரன் விஷ்ணுவர்த்தினி உளவியற் கலைப் பட்டதாரி. யாழ்ப்பாணம் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். தற்போது யா/அடம்பன் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையிலும், யா/ மணற்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் ‘வழிகாட்டலும் ஆலோசனையும்’ பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 318ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Clicker Games Play On Crazygames

Content What Are The Most Poporar Clicker Games? Vreau Oarecum Să Fac Primii Pași Și Să Mă Certific Predă Calculatoar Vechi De Acasă În Punctele