17302 நவீன முன்பள்ளிக் கல்வியில் ஆசிரியரும் பெற்றோரும்.

பா.தனபாலன், கர்ணி தனபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 259 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5  சமீ., ISBN: 978-624-6164-83-6.

இலங்கையில் இன்று முன்பள்ளிப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இத்துறைசார் அபிவிருத்திகளை தேசிய ரீதியில் முறைமைப்படுத்தி பல்வேறு செயற்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அத்துடன் தேசிய கல்வி நிறுவகமும் திறந்த பல்கலைக்கழகமும் மாகாணக் கல்விப் பிரிவுகளும் உள்ளூராட்சி மன்றங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தனியாரும் இத்துறைசார் அபிவிருத்தியிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வாண்மைத்துவ வலுவூட்டலிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இவற்றின் செயன்முறைகளுக்கு வழிகாட்டவும் முன்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் இத்துறைசார் நவீன விடயங்களை அறிய உதவும் சுயகற்றல் கையேடாக இந்நூல் பெற்றோரும் முன்பள்ளிக் கல்வியும், முன்பள்ளி ஆசிரியரின் அரவணைப்பும் ஆளுமையும், முன்பள்ளிக் கற்றல் வட்டங்கள், நவீன முன்பள்ளிக் கல்விப் பிரயோகம், புலன் அனுபவங்கள் மூலம் முன்பள்ளிச் சிறார்களுக்குக் கற்பித்தலும் விளையாடிக் கற்றலும், கற்றல் அனுபவங்களை வழங்குதல் ஆகிய ஆறு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக ‘முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய தரநியமங்கள்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. கலாநிதி பாலசுப்பிரமணியம் தனபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்பள்ளிக் கல்வியில் முதுதத்துவமாணி ஆய்வையும் முன்பள்ளி ஆரம்பக் கல்வியில் கலாநிதிப்பட்ட ஆய்வையும் மேற்கொண்டவர். திருமதி கர்ணி தனபாலன் கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலி சிறுவர் பூங்கா முன்பள்ளிக் குழந்தைகள் காப்பக வளாகத்தின் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

А как танцевать в блэкджек wikiHow

Content Пинко казино официальный сайт: А как адекватно бацать во блэкджек в карты? Водящая авераж забавы в блэкджек Как работает базовая авераж в блэкджеке? Обычно

17968 எமது கிராமங்களும் அவற்றைச் செதுக்கிய சிற்பிகளும்: பாகம் 1.

வே. விவேகானந்தன். சுவிட்சர்லாந்து: பாலர் ஞானோதய சங்கம், சுவிட்சர்லாந்து கிளை, இணை வெளியீடு, பிரித்தானியா: பாலர் ஞானோதய சங்கம், பிரித்தானியக் கிளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). ii, 164