ஆபிரஹாம் ஜோசப் (மூலம்), என்.சரவணன், பிரமிளா பிரதீபன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 89 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-76-8.
1869இல் வெளியான இந்நூல் மலையகத்தில் வெளிவந்த முதலாவது நூலாகக் கருதப்படுகின்றது. மூலப் பிரதி Cummi Poem on Coffee Planting, with English Rranslation என்ற ஆங்கிலத் தலைப்புடன் யாழ்ப்பாணம் Strong and Asbury அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலிலுள்ள 280 கும்மிப் பாடல்களும் வலது பக்கத்தில் தமிழிலும் இடது பக்கத்தில் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வடிவமைக்கப்பட்டிருந்தன. கோப்பிப் பயிற்செய்கைக்கான வழிகாட்டற் கைந்நூலாக கும்மி வடிவத்தில் இதனை எழுதிமுடித்திருக்கிறார் ஆபிரஹாம் ஜோசப். இவர் ஒரு இந்தியத் தமிழர் என்ற வகையிலும் தமிழில் எழுதப்பட்டதாலும் இதனை நாம் மலையகத்தின் முதலாவது நூல் எனக் குறிப்பிடுகின்றோம். துரைத்தனத்தினதும் வெள்ளைத்தனத்தினதும் காலனித்துவத்தினதும் கத்தோலிக்க ஆதிக்கத்தினதும் ஆங்கிலேயத்தினதும் ஆண்டான்தனத்தினதும் கைக்கூலியாகவே ஆபிரஹாம் ஜோசப் இயங்கியுள்ளார் என்பதை இந்நூலின் மூலம் இனங்காண முடிகின்றது. பின்னிணைப்பாக A Tamil’s Account of the Coffee Districts of Ceylon’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரை ஒன்றும் தரப்பட்டுள்ளது.