தர்மலிங்கம் ஸ்ரீபிரகாஸ். யாழ்ப்பாணம்: விமலா வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13 சமீ., ISBN: 978-624-93289-0-7.
யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆசிரியரான நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகல்விமாணிப் பட்டத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புவியியல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். சிறந்த சமூக அரசியல் செயற்பாட்டாளராகவும் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், நாடகவியலாளர் என்ற பல்பரிமாணங்களைக் கொண்டவராகவும் விளங்குபவர்;. இந்நூல் நெடுந்தீவு மக்களின் வாழ்வியலை, குறிப்பாக வாய்மொழிப் பாடல்களை ஆவணப்படுத்தியுள்ளது. பிரதேச அறிமுகம், பிள்ளையை இழந்து தவித்தல், உறவினர் வருகையின் தாமதத்தை வினாவுதல், எதிர்காலம் குறித்த அச்சம், ஆற்றமுடியாத துயரம், நித்தம் நடந்த வழி, குறுகிய திருமண வாழ்வு, கோலமிடாப் பெண், ஒப்பாரி உரையாடல், மாண்டவரை காண்பதில்லை, நோய் வந்ததென்ன?, பிணம் ஏற்றி வந்ததென்ன?, கொள்ளையிடப்பட்ட உயிர், சோட்டையினால் வாடுறமே, நட்டனைகள் கூறினம், யாருதவி, பெருகிவரும் மாம்பழம், என் வண்டே, கரைவலைப் பாடல் ஆகிய 19 தலைப்புகளில் இப்பாடல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன.