17314 மருவா நெறிப் பழமொழிகள்.

பொலிகை ஜெயா (இயற்பெயர்: பன்னிருகரம் ஜெயக்கொடி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-05-8.

வாய்மொழி இலக்கியங்களில் மிகப் பழமையானவை பழமொழிகளாகும். மனித வாழ்விற்கு நன்நெறிகளை முன்னோரின் அனுபவங்களினூடாக பழமொழிகள் பரம்பரை வழியாகக் கடத்தி வந்துள்ளன. காலக்கிரமத்தில் சமூகமாற்றத்தின் பயனாக மருவல்களுக்கு உள்ளாகி வந்துள்ள இப்பழமொழிகளின் மூல அர்த்தங்களை கண்டறியும் பணியும் அவ்வப்போது  எம்மவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது தான் சரியென்று உறுதிபடக் குறிப்பிட முடியாத போதிலும், இந்தப் பழமொழிக்கு இப்படியும் ஓர் அர்த்தம் உள்ளதா என்று எம்மை சிந்திக்கத் தூண்டும் வகையில் இம்மருவல்கள் அவ்வப்போது உரைகளின் வழியாகவும் நூல்வழியாகவும் பலராலும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. வடபுலத்தில் பொலிகண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பொலிகை ஜெயா பின்னாளில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். பல்வேறு பழமொழிகளினதும் மருவல்களை இலக்கிய, இலக்கண ஆதாரங்களுடன் அன்றைய தமிழரின் வாழ்வியல் கூறுகளை நினைவூட்டி சிறு கட்டுரைக் குறிப்புகளாகத் தந்திருக்கிறார். ஒவ்வொரு பழமொழியினதும் தற்கால மருவிய வடிவத்தை தந்து அதற்காக இன்று வழக்கில் உள்ள அர்த்தத்தைக் கூறி, தொடர்ந்து அப்பழமொழியின் மூல வடிவத்தைக் கண்டறிந்து வழங்கி அதற்கான அர்த்தத்தையும் வழங்கியிருக்கிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 382ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்