17319 அதுவா, இதுவா? (4.3).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-03-8.

மனித வாழ்க்கையில் ஒன்று தேவை என்றால் இன்னொன்றைப் பொறுத்துத்தான் போகவேண்டும். கையில் உள்ள பணத்திற்கு பழச்சந்தையில் உள்ள பழங்கள் அனைத்தையும் வாங்க முடியாது. இதுவா அதுவா முக்கியம் என்பதை தேர்வுசெய்யும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள சிறுவர்கள் முன்வரவேண்டும் என்ற கருத்தை பாட்டியுடன் பழச்சந்தைக்குச் செல்லும் மது அனுபவபூர்வமாகக் கற்றுக்கொள்கிறாள். இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 4.3 ஆகும்.

ஏனைய பதிவுகள்

Better A home Investing Courses 2024

Content Booksta.pub Regarding the arena of a real income betting, prioritizing defense and fair enjoy is essential. Cellular casino software have to adhere to shelter