17322 அழகு (1.3).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-00-7.

அழகுக்கான பல்வேறு விளக்கங்களை பாலர் மனதில் பதித்துவிடும் முயற்சி. அன்பு காட்டுதல் அழகு, உதவி செய்தல் அழகு, மதித்து நடத்தல் அழகு, உண்மையாக இருத்தல் அழகு, ஊக்குவித்தல் அழகு, அக்கறை செலுத்தல் அழகு ஆகிய வசனங்களின் ஊடாக பாலர்களுக்கு வண்ணப்பட விளக்கங்களுடன் இந்நூல் வழங்குகின்றது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 1.3 ஆகும்.

ஏனைய பதிவுகள்

17401 அமிர்த வர்ஷனிக் கீர்த்தனைகள்.

ந.வீரமணி ஐயர். திருக்கோணமலை: பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர், சிவயோக சமாஜம், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி

12133 – கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆச்சிரம பஜனாவளி.

ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம் (இலங்கைக் கிளை), இராமகிருஷ்ணா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1960. (கொழும்பு 11: ஆவ்ரா பிரின்டிங் வேர்க்ஸ், 19, செட்டியார்