17333 கடற்கன்னிகளும் கடற்புறாக்களும் (3.1).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-16-8.

கடற்கரை ஓரத்தில் தன் குடும்பத்தினருடன் இன்பமாக வாழும் ஒரு கடற்புறாவின் பார்வையில் மனிதர்களால் கடலில் வீசப்படும் குப்பைகளால் கடல் உயிரினங்களுக்கு நேரும்  இன்னல்கள் பற்றி விழிப்புணர்வூட்டப்படுகின்றது. அப்பிரதேச மீனவர்களின் சுத்திகரிப்புப் பணிகளுக்கு கடற்புறாவும் தன் குடும்பத்தை ஈடுபடுத்துகின்றது. இக்கதையில் கடற்கன்னிகள் கடலன்னையாக உருவகிக்கப்படுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.1 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Finest Mobile Casino Bonuses 2023

Blogs Shell out From the Cellular Gambling enterprise Bonuses Could it be Better to Have fun with More A credit card Or Debit Card? Factual

16533 சுதந்திரக் காற்று: கவிதைகள்.

கா.தவபாலன்; (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜ{லை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xvi, 17-84