17335 காகிதக் கப்பல் (2.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-06-9.

வானம் இருண்டு, காற்று பலமாக வீசியது. தென்னோலைகள் சலசலக்க மாமரத்தின் கீழிருந்த இலைகள் காற்றில் மிதந்தன. மின்னல் மின்னி இடி இடிக்கிறது. மழை பெய்து வீட்டின் முன் மழைநீர் தேங்குகின்றது. பாட்டியும் பேரர்களும் இணைந்து காகிதக் கப்பல் செய்து தேங்கிநின்ற மழைநீரில் கப்பலோட்டி மகிழ்கின்றார்கள். இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.2 ஆகும்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Automat Online Zdarma

Content Kann Ich Book Of Ra Kostenlos Und Ohne Anmeldung Spielen?: Power Stars Hack Slots Spiel online kann Ich Den Book Of Ra Magic Book