17346 மண்புழு மாயம் (2.3).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-12-0.

மழைகாலத்தில் மண்புழுவைக்கண்டு வெறுப்படையும் தம் மகளுக்கு மண்புழுவின் பயன்பாடு பற்றி விளக்கும் பெற்றோரின் உரையாடல் இது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.3 ஆகும்.

ஏனைய பதிவுகள்

16819 உமர் ரலி புராணம் (முதல் பாகம்).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி

Land der dichter und denker

Content Viel mehr zu unseren Traktandum 5 Online Echtgeld Casinos Österreichs Spielautomaten Testberichte – Erfahrungen wie neu unter Spinsfactory.com ERHALTE Nachfolgende BESTEN Casino BONUSANGEBOTE Jetzt

11428 சேதன இரசாயனவியல்.

அருண பண்டார ரணதுங்க, றிஸ்வான் எம்.சலாஹீதீன். மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி). (9), 335

12899 – அண்ணாமலை அருள்விளக்கு.

ஸ்ரீ ரமண அடியார் குழு. இலங்கை: பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் நூற்றாண்டு விழா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1980. (கொழும்பு: ராஜா பிரஸ், 92, பாமங்கடை வீதி). (20) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,