17348 யாமினியின் அதிசய உலகம் (4.1).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-21-2.

கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இந்நூலின் வாசிப்பு மட்டம் 4.1 ஆகும். மாய உலகில் வாழ்ந்த யாமினி என்ற துடிப்பான, கருணை உள்ளம் கொண்ட சிறுமியினதும் அவளுக்கு வாய்த்த சிட்டு என்ற மந்திரக் குதிரையினதும் சாகசக் கதை இது. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்

Angie’s go to site Lobster

Blogs Wines and you may Alcohol Selection That have Costs Effective Seafood Feeding Actions Within the A seafood Farm And you can Form of Feeders