14539 சின்னஞ்சிறிய பூக்கள்-5.

உதவி. நண்பர்கள் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மனி: Uthawi.Media, Postfach 1226, 59884, Eslohe,1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு: Crescendoo Link). (4), 78 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. சின்னஞ்சிறிய பூக்கள் என்ற தொடரில் ஜேர்மன், உதவி டொட் நெட் இணையத்தின் அனுசரணையுடன் முன்பள்ளிச் சிறுவர்களான சின்னஞ்சிறியோரின் ஆக்கங்களை தொகுத்து உதவி இணையத்தள நண்பர்களால் 2011 முதல் அவ்வப்போது நான்கு பாகங்கள் வெளியிடப்பட்டன. சின்னஞ்சிறிய பூக்கள்-1, கதை சொல்லிகளின் தொகுப்பாக ஒக்டோபர் 2011இல் மட்டக்களப்பு சண் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு 36 பக்கங்களில் வெளியானது. இவ்வாக்கங்கள் மழலைகளின் பேச்சுவடிவிலேயே இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்