நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
viii, 260 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-175-5.
இந்நூல் இயற்கை அனர்த்தங்களின் அடிப்படைகள் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அறிமுகம், சூறாவளிகள், வெள்ளப்பெருக்கு, வரட்சி, நிலச்சரிவு, புவிநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு, இடி மின்னல், பனிப்பாறைச் சரிவு, முடிவுரை ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியயல்துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக காலநிலை மாற்றம், அனர்த்த முகாமைத்துவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் கற்பித்தல் சார் அனுபவமும் கொண்ட இவர் தனது கலாநிதி கற்கையினை மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்துள்ளார்.