நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
viii, 248 பக்கம், விலை: ரூபா 1800., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-685-173-1.
காலநிலை மாற்றம் தொடர்பான அடிப்படை விடயங்களை அறிந்துகொள்ள முன்வரும் இலங்கையர்களுக்கு ஒரு முழுமையான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான அறிமுகம், காலநிலை மாற்றத்துக்கான கடந்தகால ஆதாரங்கள், காலநிலை மாற்றம் பற்றிய கோட்பாடுகள், காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், காலநிலை மாற்ற பாதிப்புகள், காலநிலை மாற்றத்தின் எதிர்கால பாதிப்புகள் பற்றிய எதிர்வுகூறல்கள், தென்னாசிய நாடுகளும் காலநிலை மாற்றமும், இலங்கையும் காலநிலை மாற்றமும், காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசு குழு, சர்வதேச காலநிலை மாற்ற மாநாடுகள், இலங்கையில் காலநிலை மாற்றத்திற்கெதிராக செயற்படும் அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகள், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகள், உசாத்துணை நூல்கள் ஆகிய 13 விடயத் தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.