எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
vi, 190 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-044-4.
பூகோளத்தின் சூழலை விளங்கிக் கொள்ளல், பூகோளக் காலநிலை மாற்றம்: ஓர் அறிமுகம், புவியின் கடந்தகாலக் காலநிலை மாற்றங்கள், வளிமண்டலத்தின் பச்சைவீட்டு வாயுக்களும் தாக்கங்களும், வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிப்பும் காலநிலை மாற்றங்களும், பூகோளம் வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றங்களும், பூகோளக் காலநிலை மாற்றமும் தொலை நுணர்வும், எல்நினோ நிகழ்வுகள்: காலநிலை மாற்றமும் அதன் சமூகத் தாக்கங்களும், பூகோளக் காலநிலை மாற்றமும் சுதேசிய மக்களும், காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச மாநாடுகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணிபுரிந்துவருகின்றார்.