ம.யோகநாதன், அ.வி.மயில்வாகனம். கொழும்பு 5: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழிகள் திணைக்களம், இல.5, பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
(4), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
நோயியல் சொற்றொகுதி என்னும் இப்பிரசுரம், அரசகரும மொழித் திணைக்களத்தினர் வெளியிட்ட சொற்றொகுதிகளுள் ஒன்றாகும். இது மேலைநாட்டு வைத்திய நூல்களை மொழிபெயர்க்கும் முகமாக எடுத்துக்கொண்ட முதற்படியாக 1965இல் தேமற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மருத்துவ பீடங்களில் மருத்துவ நூல்களிலிருந்து பெறப்பட்ட நோயியல் பற்றிக் கற்போருக்கு வேண்டிய விஞ்ஞானச் சொற்கள் அத்தனையும் இதில் அடங்கியுள்ளது. இப்பணியினை மேற்கொண்ட சொல்லாராய்ந்த குழுவினராக திருமதி கலாநிதி ம. யோகநாதன் (பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர்), அ.வி.மயில்வாகனம் (உதவி ஆணையாளர்) ஆகியோர் ஆற்றியிருந்தனர்;. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59040).