17361 தாதிய வரலாறு.

ரஜுலாதேவி வல்லிபுரநாதன். யாழ்ப்பாணம்: ருக்மணி வெளியீடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நவயோக அச்சகம்).

94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் ஆதிகாலத்தில் பண்டைய நகரங்களிலும், நாடுகளிலும் மருத்துவமும் தாதியமும் எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ந்தது எனவும் நோய், சிகிச்சை, பராமரிப்பு பற்றிய  மக்களின் நம்பிக்கைகள், சமயங்களின் செல்வாக்கு, அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் என்பன இத்துறையை வளம்படுத்திய பாங்கு என்பன விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் நைற்றிங்கேல் வாக்குறுதி, புராதன கால மருத்துவம், தாதியம் ஒரு தொழிலாக, தாதியத்தில் சமயங்களின் பங்கு, இலங்கைத் தாதிய சேவை,  கனடா தாதிய சேவை, அமெரிக்க தாதிய சேவை, அவுஸ்திரேலிய தாதிய சேவை, இந்திய தாதிய சேவை, புளோரன்ஸ் நைற்றிங்கேல், சர்வதேச தாதியர் சங்கம், இலங்கை தாதியர் சங்கம் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் இலங்கையில் பல தாதிய மாணவர்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்தவர். இவரது மாணவர்கள் இலங்கை முழுவதும் மதிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவரது பல வருட கற்பித்தல் அனுபவங்கள், அறிவுத்தேடல்களின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67157).

ஏனைய பதிவுகள்

Black-jack Strategy

Content Have been The brand new Campus Moments Try During the Real Mit?: casino no deposit Dunder Is Black-jack Same as Pontoon? Safer Online casino