17365 இனப்பெருக்கச் சுகாதார உபதேச வழிகாட்டி.

எம்.எச்.எம்.யாக்கூத் (தமிழாக்கம்).  தேசிய கல்வி நிறுவக சனத்தொகை, குடும்ப வாழ்க்கை (இனப்பெருக்கச் சுகாதார)கல்விச் செயற்திட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மஹரகம: தேசிய கல்வி நிறுவன அச்சகம்).

(10), 65 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அறிமுகம், இலங்கைப் பாடசாலைகளுக்கு பாடசாலை உபதேசச் சேவையின் இன்றியமையாமையும் அதன் பின்னணியும், கட்டிளமைப் பருவமும் யுவப் பருவமும், கட்டிளமைப் பருவத்தினரில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உள, மனவெழுச்சி மாற்றங்கள், பாலியல் சார்ந்த மாற்றங்கள், மானிடப் பால்நிலையும் ஆண் பெண் பால்நிலைப்பாடும், உபதேச எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும், உபதேசகரின் செயற்பங்கு, இனப்பெருக்கச் சுகாதாரக் கல்வியும் உபதேசச் செயன்முறையும், இனப்பெருக்கச் சுகாதாரம், பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களும் எயிட்ஸ் நோயும், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கத் தக்க வழிகள் எவை?, பாலியல் சார்ந்த கொடுமைப்படுத்தல்கள் ஆகிய பாடப் பரப்புகளை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70202).

ஏனைய பதிவுகள்