தொகுப்புக் குழு. யாழ்ப்பாணம்: நீரிழிவு சிகிச்சை நிலையம், போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, ஆவணி 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறிண்டேர்ஸ்;, 424, காங்கேசன்துறை வீதி).
vi, 134 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21.5×15 சமீ.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ, சுகாதார விடயங்கள் சம்பந்தமான கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூலின் தொகுப்புக் குழுவில் Dr.S.சிவன்சுதன், J.ஜெயந்தன், S. சுதாகரன், Dr. G.J.பிரதீபன், Dr.(Mrs)P.செல்வகரன், Dr.R.பரமேஸ்வரன், Dr.S.உமைபாலன், Dr.S.தினேசன், Dr.R.றமா வித்தியா, Dr.M.சரண்யா, Mrs.S.பாலசுந்தரம், Miss.V. கனிஸ்ரலா, Miss.S.சுகன்யா, Mrs.P.யோகநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் வைத்திய மலரிலே வெளிவந்த ‘நித்திய சுகத்தை நோக்கி’ என்ற பகுதியிலே முன்னர் பிரசுரிக்கப்பட்ட சுகாதார விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.