ஆ.ஜென்சன் றொனால்ட். சாவகச்சேரி: சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இணை வெளியீடு, கனடா: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், 1வது பதிப்பு, ஜுலை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
76 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98956-3-8.
இந்நூல் இளம்பராயத்தினர், கர்ப்பிணித் தாய்மார், பிள்ளைகளை பராமரிப்போர் அவசியம் அறிந்திருக்கவேண்டிய நுட்பமான சுகாதாரத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. தாய் சேய் நலன் பராமரிப்பு, வளரிளம் பருவ சுகநலம், உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள், வளரிளம் பருவப் போசாக்கு, பூப்பெய்துதல், வளரிளம் பருவப் பெண்கள் கருத்தில் கொள்ளவேண்டியவை, பருவமடைய இருக்கும், பருவமடைந்த பெண் பிள்ளைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை, திருமண வாழ்வுக்கான வழிகாட்டல், போலிக் அமிலம், கர்ப்பம் தரித்தல், பிரசவம், தாய்ப்பாலூட்டல், குழந்தையின் வளர்ச்சியும் விருத்தியும், மேலதிக உணவூட்டல், பிள்ளைகள் மீது பெற்றோர் செலுத்தவேண்டிய கரிசனை, மூளை வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மூளை விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் செயற்பாடுகள், முன்பள்ளிகளின் முக்கியத்துவம், முன்பள்ளிகளை நிறுவும்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள், ஐந்து முதல் பத்து வரையான வயதுப் பிரிவில் உள்ள சிறுவர்களுக்கான விசேட கவனிப்புகள், குடும்பத் திட்டமிடல், அவசரகால கருத்தடை முறைகள், கருவளக் குறைவும் கருவுறாமையும், மாதவிடாய் நிறுத்தம் ஆகிய 24 தலைப்புகளில் எழுதப்பட்ட சுகாதார மேம்பாட்டு நூல். இந் நூலாசிரியர் ஒரு பொது சுகாதாரப் பரிசோதகராவார். பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார்.