நாகரத்தினம் கணேசலிங்கநாதன் (பதிப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: நாகரத்தினம் கணேசலிங்கநாதன், முருக வாசா, மதன்மை பாங்கர் இல்லம், சிவன் கொவிலடி, வட்டு மேற்கு, 2வது பதிப்பு, நவம்பர் 2023, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
141 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0469-21-5.
சிவன்கோவிலடி சித்த மருத்துவர் நாகரத்தினம் கணேசலிங்கநாதன் அவர்கள் உரைவிளக்கத்துடன் பதிப்பித்துள்ள இந்நூலின் மூலநூல் யாழ்ப்பாணம்-இருபாலைச் செட்டியார் அவர்களால் ’அமிர்தசாகர பதார்த்த சூடாமணி’ என்ற பெயரில் 304 செய்யுள் வடிவில் இலக்கண யாப்புக்கமைய ஏட்டுருவில் எழுதப்பெற்று, 1927இல் ஐ.பொன்னையாபிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இருபாலைச் செட்டியாரவர்களின் இயற்பெயர் தெரியாதபோதிலும், மீசாலையில் பிறந்து இருபாலையில் நீண்டகாலம் வாழ்ந்த பெரியாரெனவும், அவர் வேளாண் செட்டி வம்சத்தைச் சேர்ந்தவரென்றும் பின்னாளில் துறவுவாழ்வை வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் பற்றி ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற நூலிலும் குறிப்புள்ளது. பதார்த்த சூடாமணியானது, உடம்போடு இயைந்து பயன்தரும் இயற்கைப் பொருட்களின் குணங்களை நன்கு விளக்குவது. நல்லன தீயனவற்றைப் பகுத்தக் காட்டுகின்றது. பஞ்சபூதங்களின் குணங்களையும், உணவுக்குரிய சோற்று வகை, சிற்றுண்டிவகை, புன்செய் தானியவகை, கீரை வகை, வேர், பூ, காய்களின் உணவுப்பயன்பாடு போன்ற இன்னோரன்ன விடயங்களை பதிவுசெய்கின்றது. சித்த மருத்துவர் நாகரத்தினம் கணேசலிங்கநாதன் உரை வழங்கியுள்ள இப்பதிப்பு கடவுள் வணக்கம், பஞ்சபூதம், சாதவகை, தாவரப் பொருட்கள், மிருகப் பொருட்கள், பறவைகள், மீன் வகை, கடைச்சரக்கு வகை, உலோக வகை ஆகிய பத்து விடயங்களாக வகுத்துத் தரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க:
குழந்தைகளின் சுகவாழ்விற்காக. 17383