W.K.ஜினதாச. கொழும்பு 11: W.K.ஜினதாச, ஆயுர்வேத வைத்தியர், 161, நொறிஸ் வீதி, 1வது பதிப்பு, 1949. (கொழும்பு: சிலோன் பிரின்டர்ஸ்).
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14 சமீ.
ஆயுர்வேத வைத்தியர் W.K.ஜினதாச அவர்களின் நிறுவனத்தினரால் உற்பத்திசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவ தைலங்களின் பயன்பாடு பற்றிய அறிமுக நூலாக இது அமைந்துள்ளது. இந்நூலில் நேத்திராலோகத் தைலம், சர்வரோக சங்கார, வலிப்புராச தைலம், சமதார இரத்தசுத்தி மருந்து, குஷ்ட தைலம், தந்தலோக சூரணம், கஸ்தூரி கல்பயோகம், பாண்டு ரோகம், நீரழிவு வியாதி, இரகசிய ஒளடதம், மூல வியாதி, ஜீவன லேகியம், இளைப்பு (ஆஸ்துமா) மருந்து, பார்ஜியாபாகு சயரோக மருந்து, மகரத்வஜ, சந்தனாதி ரசாயன, சந்திரகாந்தி தைலம், மகாசித்த கல்ப ரசாயன, அமுர்தாதி ரசாயன, சிதறாக்க (அஜீரணம்), பல்வலி மருந்து, இரத்தக் கழிச்சலுக்கு தாதகி, அசிற்றீர்வாத தைலம், சொப்பன பதரசய, காது மருந்து, பீனிசத் தைலம், ஸ்ரீலங்கா பரிமள தைலம், கிரமம் தப்பிய மாதவிடாய், வஜீகரண ரசாயன எண்ணெய், பாலகுமார தைலம், காயங்களுக்கு எண்ணெய், பருக்களுக்கு தைலம், கக்கூசுப்பத்து முதலிய பத்து எண்ணெய், அண்டவாதத்துக்கான எண்ணெய், கண்டமாலை அல்லது தோலின்மேல் வெண்ணிறப் புள்ளிகள், சிரங்குகளுக்கும் குஷ்டத்துக்கும் சொரிகரப்பனுக்கும் எண்ணெய், சுகபேதி மாத்திரை, காசரோகத்துக்கான மருந்து ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74550).