17389 அரக்கு வேலை: இரண்டாம் பாகம்: சிரேட்ட வகுப்புகளுக்குரியது.

எச்.எம்.சோமரத்தின, கே.எச்.அபயவர்த்தன (மூலம்), நா.சுப்பிரமணியன் (தமிழாக்கம்). கொழும்பு: அரச கரும மொழியலுவலகம், இதமேகம, வெரல்லகம, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு: அரசாங்க அச்சகம், பானலுவ, பாதுக்க).

v, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இலங்கை கல்வித் திணைக்களத்தின்; பொதுக் கல்வித் தகுதிப் பரீட்சைப் பாடத்திட்டத்தில் 1957 முதல் அரக்குவேலையும் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டதையடுத்து, இக்கலை மீளெழுச்சி காணத் தொடங்கியது. கண்டி அரசுக் காலத்தில் அரக்குத் தொழில் பிரபல்யமடைந்து காணப்பட்டதாக சான்றுகள் உள்ளன. ‘கோட்டல்பத்த’ எனப்படும் அரச தொழில்நுட்பப் பிரிவில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் ‘ஹங்கிடியன்’ என அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அரக்கு என்பது அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒருவகை திரவம் காற்றில் உலர்ந்து இயற்கைப் பிசின் அரக்காகிறது. அரக்கு நீரிலும் எண்ணெயிலும் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையும் கொண்டது. பெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக் கிளைகளில் படிகிறது. இக்கிளையை வெட்டியெடுத்து அவற்றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள் இதுவே ‘கொம்பரக்கு” எனப்படும். பின் அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தம் செய்த அரக்கு ‘மணியரக்கு’ எனப்படுகிறது. மணியரக்கை மேலும் தூய்மைப்படுத்தி தகடு வடிவில் தயாரிப்பார்கள். இது ‘தகடரக்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘அரக்கு வேலை’ நூலின் இரண்டாம் பாகமாக வெளிவரும் இந்நூலில் நான்காம் ஐந்தாம் பகுதிகள் இடம்பெறுகின்றன. இதில் அரக்கு வேலை சம்பந்தமான கடைச்சல் இயந்திர தொழிற்பாடு பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. பெரும்பாலும் குருபரம்பரை இரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த அரக்கு வேலை சம்பந்தமான பல தொழில்நுட்ப விடயங்களை இந்நூலின் இரு பாகங்களிலும்; வெளிப்படுத்தியுள்ளார்கள். இரண்டாம் பாகத்தில் நான்காம், ஐந்தாம் படிநிலைகள் காணப்படுகின்றன. நான்காம் படிநிலையில் கடைச்சல் இயந்திரம், கடைச்சல் இயந்திரத்திலிட்டு திருப்புதல், கடைச்சல் இயந்திரத்தால் அரக்கிடுதல், தளபாடங்களைச் செய்யத் தெரிந்துகொள்ள வேண்டிய மூட்டுவகைகள், ஆணி-திருகாணி-வச்சிரம், சித்திர உருவங்களைச் செதுக்குதல், முற்காலச் சிற்பிகள் உபயோகித்த சாய வகைகள், நகவரக்கு வேலை கடைச்சலெந்திர வேலைக்கு எடுக்கப்படும் மரம், புராதன அலங்காரச் சித்திர உருவங்கள், அப்பியாசம் ஆகிய ஒன்பது பாடங்கள் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் படிநிலையில் கடைச்சல் இயந்திரத்தைச் செய்தலும் பொருத்துதலும், மரத்தில் உறுப்புக்கள் அமைக்கக் கையாளப்படும் பலவித முறைகள், கடைச்சல் இயந்திரக் கருவிகளைச் சாணை பிடித்தலும், பாதுகாப்பான இடத்தில் வைத்தலும், பலவித வேலைகளுக்காக அரக்கைத் தயாரித்துக் கொள்ளுதல், சித்திர உருவங்களைச் செதுக்குதலும் உட்பதித்தலும், கடைச்சல் இயந்திர வேலையையும் நகவரக்கு வேலையையும் கலந்து செய்தல், மூட்டுக்கள், பொருள் செலவு மதிப்பீடு, தளவாடங்களைச் செய்தலும் அலங்கரித்தலும், கண்கவர் சித்திர உருவங்களைச் செதுக்குதலும், இலங்கையின் புராதன கடைச்சலெந்திர முறை, அலங்காரச் சித்திர உருவங்கள், அப்பியாசம் ஆகிய பாடங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18403).

ஏனைய பதிவுகள்

17237 வீழ்ந்ததும் எழுந்ததும்.

கரு. பூபாலன். தமிழ்நாடு: கரு. பூபாலன், மேட்டுப்பாளையம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தெரிவுசெய்யப்பட்ட எட்டுப்

Update Contact and Direct Deposit

Content Which Casinos Accept Pay By Phone?: superb website to read Online Casino Pay By Phone Bill Australia We Check Payment Information Play In The