17391 யாழ்ப்பாணத்து சமையல்: சைவம்- அசைவம்.

கருணாதேவி மனோகரபூபன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).

76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

பல வருடங்களாக நூலாசிரியர் செய்து பார்த்த செய்முறைக் குறிப்புகளில் இருந்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் புகலிடங்களிலும் உள்ள எம்மவர்கள் சங்கடமின்றி சாதாரணமாகச் சமைக்கக்கூடியவாறு எழுதப்பட்டுள்ள இந்நூலில், ஒவ்வொரு சமையல் குறிப்பிலும் ‘தேவையான பொருட்கள்’ என்ற பட்டியலும், ‘செய்முறை’யும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்துச் சமையலில் நாளாந்தம் இடம்பெறும் உணவு வகைகளை ஆசிரியர் சைவம்-அசைவம் என இரண்டாக வகுத்துள்ளார். சைவ உணவுவகைகளில் 20 தூள் கறிகள், 10 பால் கறிகள், 6 வறைகள், 10 சம்பல் வகைகள் என்பனவும், அசைவம் என்ற வகுப்பின் கீழ் 20 வகையான உணவுகளும் தயாரிப்பது எப்படி என்று விரிவாக விளக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்